பஞ்சாயத்து தலைவர் வீட்டில் கல்வீசிய 2 பேர் கைது


பஞ்சாயத்து தலைவர் வீட்டில் கல்வீசிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2021 2:28 AM IST (Updated: 25 Oct 2021 2:28 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே பஞ்சாயத்து தலைவர் வீட்டில் கல்வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை:
செங்கோட்டை அருகே தெற்குமேடு பஞ்சாயத்து தலைவராக பட்டதாரி இளம்பெண் அனு (வயது 22) வெற்றி பெற்று பதவியேற்றார். இந்த நிலையில் தேர்தல் தகராறு காரணமாக, கடந்த 22-ந்தேதி இரவில் மர்மநபர்கள் அனுவின் வீட்டின் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினர். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், கார் கண்ணாடிகள் நொறுங்கின.
இதுகுறித்த புகாரின்பேரில், புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தெற்குமேடு பாக்கியா நகரைச் சேர்ந்த அய்யாக்குட்டி மகன் கார்த்தி பாண்டி (வயது 41), பெருமாள் மகன் முருகன் (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story