கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 25 Oct 2021 2:36 AM IST (Updated: 25 Oct 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடற்கரையில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடற்கரையில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
ஊரடங்கில் தளர்வு 
உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கடலில் நீராடி, கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட்டு, சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்வார்கள்.
கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களுக்கும், கடற்கரைக்கும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணிகள்                 குவிந்தனர்
குறிப்பாக விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடலில் புனித நீராடி, கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், விவேகானந்தா வளாகத்தில் உள்ள ராமாயண கண்காட்சிக் கூடம், மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர். 
நீண்ட நாட்களுக்கு பிறகு கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கன்னியாகுமரியில் அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story