திற்பரப்பு தடுப்பணையில் மீண்டும் படகு சவாரி


திற்பரப்பு தடுப்பணையில் மீண்டும் படகு சவாரி
x
தினத்தந்தி 25 Oct 2021 2:48 AM IST (Updated: 25 Oct 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால், 2 வாரங்களுக்கு பின்பு திற்பரப்பில் படகு சவாரி தொடங்கியது.

திருவட்டார்:
குமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால், 2 வாரங்களுக்கு பின்பு திற்பரப்பில் படகு சவாரி தொடங்கியது. 
சுற்றுலா தலம்
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் திற்பரப்பு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். 
மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
தற்போது மழை குறைந்ததால் அருவியில் மிதமாக தண்ணீர்  கொட்டுகிறது. மேலும், இரண்டு வாரங்களுக்கு பின்பு நேற்று படகு சவாரி தொடங்கியது. 
விடுமுறை நாளான நேற்று திற்பரப்பு அருவிக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தொலைவில் நின்று கண்டு ரசித்தனர். பின்னர், தடுப்பணையில் சென்று படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
மாத்தூர் தொட்டிப்பாலம்
இதுபோல் மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறு முனை வரை நடந்து சென்று இயற்கை அழகை ரசித்தனர். மேலும், அந்த பகுதியில் குறைந்த விலையில் கிடைக்கும்  அன்னாசி பழங்களை விரும்பி வாங்கி சாப்பிட்டனர். இதனால், மாத்தூர் தொட்டிப்பாலம் மீண்டும் களை கட்டத்தொடங்கியது.

Next Story