விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2021 7:35 PM IST (Updated: 25 Oct 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

உரதட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி:
உரதட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தி்ல் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டம் 
நாகை மாவட்டம் திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பொன்மணி தலைமை தாங்கினார். விவசாய சங்க மாநில தலைவர் சுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு பாரபட்சமாக காப்பீடு வழங்கியதை மாற்றி பதிவு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு வழங்க வேண்டும். 
பயிர்க்கடன் வழங்க வேண்டும்
நிலுவையில் உள்ள கூட்டுறவு கடன் சங்க பயிர்க்கடனை உடனே வழங்க வேண்டும்.  உரம் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாரதி, பாலு, காரல்மார்க்ஸ், விவசாய சங்க உறுப்பினர்கள் சுப்பிரமணியன், தமிழரசன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story