பந்தலூரில் தொடர் மழையால் மண்சரிவு
பந்தலூரில் தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது.
பந்தலூர்
பந்தலூரில் தொடர் மழையால் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது.
தொடர் மழை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் பொன்னானி, சோலாடி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இது தவிர மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதனால் ஆங்காங்கே மின்தடை ஏற்பட்டது.
மண்சரிவு
இதற்கிடையில் அம்பலமூலாவில் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் அருகில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் அவதிப்பட்டனர். தொடர்ந்து நெலாக்கோட்டை ஊராட்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் வந்து, சரிந்து கிடந்த மண்ணை அகற்றினர். அங்கு தடுப்புச்சுவர் கட்டித்தர கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்தது
இதேபோன்று சேரம்பாடி அருகே சந்தனமாகுன்னு பகுதிக்கு செல்லும் சாலையை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தண்ணீரில் நடந்து செல்ல பொதுமக்கள் அவதிப்பட்டனர். சிலர் வழுக்கி விழுந்து காயம் அடையும் நிலை ஏற்பட்டது.
பந்தலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
Related Tags :
Next Story