உடன்குடி வாரச்சந்தையில் பெண் வாங்கிய கீரைக்கட்டுடன் வீட்டுக்கு வந்த பாம்பால் பரபரப்பு


உடன்குடி வாரச்சந்தையில்  பெண் வாங்கிய கீரைக்கட்டுடன் வீட்டுக்கு  வந்த பாம்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 8:23 PM IST (Updated: 25 Oct 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

உடன்குடி வாரச்சந்தையில் பெண் வாங்கிய கீரைக்கட்டுடன் வீட்டுக்கு வந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது

உடன்குடி:
உடன்குடி மெயின் பஜார் 4 சந்திப்பு பகுதியையொட்டி சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் திங்கட்கிழமை தோறும் செயல்படும் வாரசந்தை வளாகம் உள்ளது. காய்கறிகள், பழவகைகள், ஆடு, கோழி, ஜவுளி, நவதானியங்கள். மளிகை பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை விற்பனை செய்யப்படும். 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இங்கு வந்து கடை விரித்து வியாபாரம் செய்வார்கள். சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள், சிறிய வியாபாரிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். 
நேற்று காலை சந்தைக்கு உடன்குடி நகர பகுதியை சேர்ந்த ஒரு பெண், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கினார். மேலும், ரூ.10க்கு ஒரு கட்டு கீரையும் வாங்கிக் கொண்டு அவர் வீட்டுக்குச் சென்றார். வீட்டுக்கு சென்றவுடன் வீட்டு முற்றத்தில் வைத்து காய்கறிகளை தனித்தனியாக பிரித்து எடுத்து வைத்தார். பின்பு கீரை கட்டை பிரித்துள்ளார். 
அப்போது கீரைக் கட்டுக்குள் இருந்த ஒரு விஷப்பாம்பு குட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கையிலிருந்த கீரைக்கட்டை தூக்கி வீட்டு வாசலில் வீசினார். அதிலிருந்த பாம்பு குட்டி தப்பி ஓடிவிட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story