போலி சாதிச்சான்று கொடுத்து வெற்றி பெற்றதை ரத்து செய்யவேண்டும். குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு


போலி சாதிச்சான்று கொடுத்து வெற்றி பெற்றதை ரத்து செய்யவேண்டும். குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 25 Oct 2021 9:20 PM IST (Updated: 25 Oct 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

குனிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றிபெற்றதை ரத்து செய்ய வேண்டும் என திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருப்பத்தூர்

குனிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றிபெற்றதை ரத்து செய்ய வேண்டும் என திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

குறை தீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. நிலப்பட்டா, பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டியும், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி பொதுமக்கள் மனு கொடுத்தனர். மொத்தம் 253 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதேபோன்று உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்ற மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகாண அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

வெற்றியை ரத்து செய்ய வேண்டும்

கந்திலி ஒன்றியம் குனிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜீவா, பவுரி, தீபாவளி, தீபா, மீனா ஆகிய 5 பேர் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

 குனிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் (எஸ்.சி.) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி ஜெயசீலன் மனைவி மரகதம் என்பவர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ஆதிதிராவிடர் என பொய்யான சான்றிதழ் வழங்கியுள்ளார். இவருடைய கணவர் ஜெயசீலன் கல்வி சான்றிதழில் குற செட்டியார் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால் மரகதம் இந்து குறவன் என்று பொய்யான சாதி சான்றிதழ் பெற்று வேட்பு மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என கூறி உள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்;த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி உள்ளிட்ட பலர் லந்துகொண்டனர்.

Next Story