ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்


ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2021 9:20 PM IST (Updated: 25 Oct 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்

ஆம்பூர்

ஆம்பூரில் கடந்த 10 வருடங்களாக சொந்த வீடு இல்லாத ஏழை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி ஆம்பூர் தாலுகா அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story