பாணாவரம் அருகே மரத்தின்மீது மோட்டார்சைக்கிள் மோதி ராணுவ வீரர் பலி


பாணாவரம் அருகே  மரத்தின்மீது மோட்டார்சைக்கிள் மோதி ராணுவ வீரர் பலி
x
தினத்தந்தி 25 Oct 2021 9:20 PM IST (Updated: 25 Oct 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

மரத்தின்மீது மோட்டார்சைக்கிள் மோதி ராணுவ வீரர் பலி

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த புதுப்பட்டு பெரிய தெருவை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அஜித் (வயது 26). ராணுவ வீரர். திருமணமாக வில்லை. இந்த நிலையில் ஒரு மாத விடுப்பில் ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் சோளிங்கர் அருகே உள்ள புலிவலம் கிராமத்தில் உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார். 

பாணாவரம் அடுத்த சூறை அருகே வரும் போது மோட்டார்சைக்கிள் நிலைத்தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி புதருக்குள் விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை நேற்று அப்பகுதியில் குப்பை எடுப்பவர்கள் பார்த்து பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story