போக்சோவில் சிறுவன் கைது


போக்சோவில் சிறுவன் கைது
x
தினத்தந்தி 25 Oct 2021 9:48 PM IST (Updated: 25 Oct 2021 9:48 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் பகுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தேனி: 

பெரியகுளம் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டு இருந்தான். இந்நிலையில் அவன் பிளஸ்-1 படிக்கும் 15 வயது மாணவியிடம் அவரை காதலிப்பதாக கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்தான். அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை வார்த்தைகள் கூறி வந்தான். 

சம்பவத்தன்று அந்த மாணவி தனது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தாள். அப்போது அந்த சிறுவன் அங்கு சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தான். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சிறுமியின் தம்பி கண் விழித்து சத்தம் போட்டதால் அந்த சிறுவன் தப்பி ஓடிவிட்டான்.

 இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தாள். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story