மாடுகளுடன் மனு கொடுக்க வந்த தாய் மகன் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


மாடுகளுடன் மனு கொடுக்க வந்த தாய் மகன் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 9:51 PM IST (Updated: 25 Oct 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாடுகளுடன் மனு கொடுக்க வந்த தாய் மகன் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் க.மாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு மனைவி காமாட்சி, இவருடைய மகன் ஆகியோர் மாடுகளுடன் மனு கொடுக்க வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் வந்த போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் காமாட்சிக்கும் போலீசாருக்கும் இடயே வாக்குவாதம் ஏற்பட்டது. 

பின்னர் தாய்-மகன் இருவரையும் சமாதானம் செய்த போலீசார் உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கலெக்டரிடம் கொடுங்கள் என்று அறிவுரை கூறினர். இதையடுத்து காமாட்சியும், அவரது மகனும் மாடுகளை கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே கட்டிப்போட்டு விட்டு கலெக்டர் ஸ்ரீதரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் தங்களுக்கு சொந்தமாக 1 சென்ட் இடதுக்கு 3 அடி அகலம் 18 அடி நீளமுள்ள பாதை வசதி உள்ளது. இந்த பாதையை மறிக்கக்கூடாது என நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றுள்ள நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் பாதையை மறித்து கம்பி வேலி அமைத்து தகராறு செய்து வருகிறார். இதனால் மாடுகளுக்கு தண்ணீர் மற்றும் தீவனம் வைக்க செல்வதற்கு வழி இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே பாதையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை அகற்றி தரவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Next Story