நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 9:53 PM IST (Updated: 25 Oct 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சொத்து பிரச்சினையால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயற்சி
நாமக்கல் பிடில்முத்து தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி லட்சுமி. இவர் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மீட்டு விசாரணைக்காக நாமக்கல் நல்லிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சொத்து பிரச்சினை
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சொத்து பிரச்சினையில் மனம் உடைந்த லட்சுமி தீக்குளிக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்தது. அவர் மாவட்ட கலெக்டருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த மனுவில், சொத்தை அபகரித்து தனது தாயாரை வெளியேற்றி விட்டார்கள். எனவே சொத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story