சூதாடிய 6 பேர் கைது


சூதாடிய 6 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2021 10:06 PM IST (Updated: 25 Oct 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்: 

கூடலூர் அருகே லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் பென்னிகுவிக் மணிமண்டபம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை கையும்களவுமாக பிடித்தனர். 

விசாரணையில் அவர்கள், லோயர்கேம்ப்  பகுதியை சேர்ந்த பகவதி முத்தையா (வயது 34), எல்.எப்.ரோடு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (25), சரவணன் (30), விஜய் (25), கார்த்திக் (27), கல்யாணி (26) எனத் தெரியவந்தது. இதுகுறித்து லோயர்கேம்ப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story