பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க அமைப்பாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், ஆவின் நிறுவனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தனித்தனியாக மொத்த பால் விற்பனை முகவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story