விழுப்புரத்தில் போதைபொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்


விழுப்புரத்தில் போதைபொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Oct 2021 4:53 PM GMT (Updated: 25 Oct 2021 4:53 PM GMT)

விழுப்புரத்தில் போதைபொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

விழுப்புரத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சாராயம் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் கலெக்டர் மோகன் கலந்து கொண்டு, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் 200-க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சாராயம், போதை பொருட்களை ஒழிப்போம் என்பது தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை கையில் எந்தி பேரணியாக சென்றனர். 

புகார் தெரிவிக்க தொலைபேசி எண்

மேலும், போதை பொருட்கள் தொடர்பான புகார்களை 24 மணிநேரமும் செயல்படும் 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிண் மூலம் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

கரகாட்டம், தப்பாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி நான்கு முனை சந்திப்பு வரை சென்றது.  மேலும், மாவட்டம் முழுவதும் கலைக்குழுக்கள் மூலமாக பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, நெடுஞ்சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை மூலம் சாராயம் மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

இதில்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், கலால் உதவி ஆணையர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story