மின்துறை தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மின்துறை தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2021 10:45 PM IST (Updated: 25 Oct 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

மின்துறை தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காட்பாடி

தமிழக அரசு மின்துறை தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது. இதனைத் திரும்பப் பெற்று தொழிற்சங்க கூட்டமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 25 சதவீதம் போனஸ் வழங்க கோரி காட்பாடி காந்திநகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி நல்லண்ணன், சி.ஐ.டி.யு. நிர்வாகி கோவிந்தராஜ், மின்துறை எம்ப்ளாயீஸ் பெடரேஷன் நிர்வாகி செந்தில், ஐக்கிய சங்க நிர்வாகி சுந்தர்ராஜன், என்ஜினீயர் யூனியன் நிர்வாகி குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். 25 சதவீதம் போனஸ் வழங்க கோரி மின்துறை ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story