பனப்பாக்கம் அருகே கணவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சாவு


பனப்பாக்கம் அருகே கணவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 25 Oct 2021 10:50 PM IST (Updated: 25 Oct 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

கணவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் சாவு

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த பெருவளையம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 48), இவரது மனைவி அலமேலு (45). கணவன்- மனைவி இடையே கடந்த 18-ந் தேதி ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டனர். அவர்கள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். 

இதில் சங்கர் 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அலமேலு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story