மனைவி குடும்பம் நடத்தவர மறுத்ததால் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி குடும்பம் நடத்தவர மறுத்ததால் கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Oct 2021 10:55 PM IST (Updated: 25 Oct 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

கட்டிட மேஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 47). கட்டிட மேஸ்திரி. இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள பள்ளக்கனியூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மலர்விழி ஏலகிரி மலையில் உள்ள படகுத்துறை பூங்காவில் கூலி வேலை செய்து வந்துள்ளார். 

நாகராஜூக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வாரம் அவர்களுக்குள் தகராறு முற்றியதில் மலர்விழி தனது 2 குழந்தையுடன் குன்னூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று முன்தினம் இரவு மலர்விழி தனது கணவருடன் போனில்பேசி உள்ளார். அப்போது நாகராஜ் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஏலகிரி மலைக்கு வருமாறு கூறியதாக தெரிகிறது. அதற்கு மலர்விழி மறுத்ததுடன், நாகராஜை குன்னூருக்கு வருமாறு கூறி உள்ளார். விரக்தி அடைந்த நாகராஜ் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் தூக்குப்போட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்த ஏலகிரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சென்று நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story