மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது


மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 25 Oct 2021 11:04 PM IST (Updated: 25 Oct 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது

கிருஷ்ணகிரி, அக்.26-
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியர் 
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக மோடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், தன்னுடைய மோட்டார் சைக்கிளை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி அருகில் நிறுத்தி இருந்தார். இந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. கிருஷ்ணகிரி பழையபேட்டை திருநீலகண்டர் தெருவை சேர்ந்த வினோத்குமார் (34) என்பவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து இருவரும் தனித்தனியாக கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தனர்.
இதேேபான்று கிருஷ்ணகிரி அருகே  பையனப்பள்ளியை சேர்ந்தவர் திம்மராஜ் (27) என்ற ஐ.டி. நிறுவன ஊழியர் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இவர், தாலுகா போலீசில் புகார் செய்தார். மேலும் கிருஷ்ணகிரி சோமார்பேட்டையைச் சேர்ந்த விஜயபிரியா (24) என்பவரது மொபட்டும் திருட்டு போனது. இவரும் தாலுகா போலீசில் புகார் செய்தார். இந்த புகார்களின் மீது போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள்களை திருடிய நபரை தேடி வந்தனர்.
கைது 
மேலும் மோட்டார் சைக்கிள் திருடிய நபரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கிருஷ்ணகிரி பஸ் நிலையம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அவருடைய பெயர் லெனின் (46) என்பதும், காவேரிப்பட்டணம் அருகே  கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர், ஆசிரியர் சின்னசாமி, வினோத்குமார், திம்மராஜ், விஜயபிரியா ஆகியோரது மோட்டார்சைக்கிள்களை திருடியவர் என்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story