உடல் நலக்குறைவால் இறந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு நிதி உதவி
ஆரணியில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.18 லட்சம் நிதி உதவியை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் வழங்கினார்.
திருவண்ணாமலை
ஆரணியில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு ரூ.18 லட்சம் நிதி உதவியை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் வழங்கினார்.
பெண் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மகளிர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.சந்திரிகா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவருக்கு கோபிநாத், கோகுல்நாத் என 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்திற்கு உதவும் வகையில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் அவர்கள் விருப்பத்தின் பேரில் நிதி வழங்கினர். இதில், ரூ.18 லட்சத்து 6 ஆயிரத்து 320 பெறப்பட்டது.
இந்த தொகையை சப்-இன்ஸ்பெக்டரின் 2 மகன்களுக்கும் தலா ரூ.9 லட்சத்து 3 ஆயிரத்து 160-ஐ காசோலையாக போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் வழங்கினார்.
கருணை அடிப்படையில்...
மேலும் அவர்களின் குடும்பத்திற்கு உடனடி தேவைக்காக மாவட்ட காவல்துறை மூலம் ரூ.50 ஆயிரமும், முதல்-அமைச்சர் நிவாரண நிதியாக ரூ.3 லட்சமும் அரசிடம் இருந்து பெற்று தரப்பட்டுள்ளது.
மேலும் குடும்ப பொது நிவாரண நிதியில் இருந்து 2 மகன்களுக்கும் தலா ரூ.3 லட்சம் அரசிடம் இருந்து பெற்றுத் தரப் பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சப்-இன்ஸ்பெக்டரின் மகன்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை மற்றும் ஓய்வூதியத்திற்கு ஆவண செய்யப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜகாளீஸ்வரன், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story