திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்களுக்கு செல்ல தடை நீட்டிப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்காக்களுக்கு செல்ல தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 11:17 PM IST (Updated: 25 Oct 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்கா, அணைகளுக்கு செல்ல 2-ந்தேதி வரை தடை நீட்டித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொழுதுப்போக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியற்றுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வருகிற 2-ந்தேதி வரை தடையை நீட்டிப்பு செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலைைய அடைய உதவிட வேண்டும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story