100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் குடும்பங்களை வெளியேற்ற கூடாது


100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் குடும்பங்களை வெளியேற்ற கூடாது
x
தினத்தந்தி 25 Oct 2021 11:18 PM IST (Updated: 25 Oct 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் குடும்பங்களை வெளியேற்ற கூடாது

தர்மபுரி, அக்.26-
பென்னாகரம் தாலுகா ஒகேனக்கல் ஊட்டமலை கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து அளித்த மனுவில், ஒகேனக்கல் பகுதிக்கு உட்பட்ட தலைவு கொட்டாய் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலைக்கு தெற்கே ஆற்றுக்கு வடக்கில் உள்ள ஓடை பகுதியில் பல குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். ஆடு, மாடு மேய்த்தும், விவசாயம் செய்தும் வாழ்ந்து வருகிறோம். வேறு எந்த தொழிலும் எங்களுக்கு தெரியாது. இந்நிலையில் ஒகேனக்கல் வனத்துறை சார்பில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென நாங்கள் குடியிருந்து வரும் வீடுகளை காலி செய்ய சொல்லி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. நாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து எங்களை வெளியேற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே நாங்கள் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து நிரந்தரமாக குடியிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story