மின் இடர்பாடுகளை சரிசெய்ய பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்புக்குழு


மின் இடர்பாடுகளை சரிசெய்ய பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்புக்குழு
x
தினத்தந்தி 25 Oct 2021 11:23 PM IST (Updated: 25 Oct 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

மின் இடர்பாடுகளை சரிசெய்ய பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மேற்பார்வை என்ஜினீயர் தகவல் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை, 
மின் இடர்பாடுகளை சரிசெய்ய பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மேற்பார்வை என்ஜினீயர் தகவல் தெரிவித்து உள்ளார்.
மின்சீரமைப்பு குழு
சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதையொட்டி மின்கட்டமைப்பில் ஏற்படும் இடர்பாடுகளை உடனடியாக சரிசெய்து தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டுஉள்ளது. 
எனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர்கள் தங்கள் பகுதியில் பருவ மழை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை சரிசெய்வதற்கு கீழ்காணும் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். 
சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சிவகங்கை மின்வாரிய பகிர்மான உதவி செயற்பொறியாளர் காத்தமுத்து 944585307, காளையார்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உதவி செயற்பொறியாளர் அன்புநாதன் 9445853078, காரைக்குடி நகர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உதவி செயற்பொறியாளர் மணிமாறன் 9445853084 ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
காரைக்குடி
 காரைக்குடி ஊரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி 9445853085, தேவகோட்டை உபகோட்ட பகுதியில் உதவி செயற்பொறியாளர் சாத்தப்பன் 9445853086, மானாமதுரை உபகோட்ட பகுதியில் உதவி செயற்பொறியாளர் சவுந்திரபாண்டி 9445853101, இளையான்குடி உபகோட்ட பகுதியில் உதவி செயற்பொறியாளர் மகேந்திரன் 9445853103 நியமிக்கப்பட்டு உள்ளார்.
 திருப்புவனம் உபகோட்ட பகுதியில் உதவி செயற் பொறி யாளர் உலகப்பன் 9445853102, திருப்பத்தூர் உபகோட்டம் பகுதியில் உதவி செயற்பொறியாளர் கணேசன் 9445853116, சிங்கம்புணரி உபகோட்ட பகுதியில் உதவி செயற்பொறி யாளர் செல்லத்துரை 9445853117 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மின் இடர்பாடுகளை சரி செய்துகொள்ளலாம். 
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story