தொழிலாளியை படுகொலை செய்த 3 பேர் கைது
ஊத்துக்குளி அருகே முன்விரோதம் காரணமாக தையல் தொழிலாளியை பாட்டிலால் குத்தி படுகொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்குளி
ஊத்துக்குளி அருகே முன்விரோதம் காரணமாக தையல் தொழிலாளியை பாட்டிலால் குத்தி படுகொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தையல் தொழிலாளி
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஊத்துக்குளி அருகே உள்ள எஸ்.பெரியபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபால் (வயது 41). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் கோபாலுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அன்று இரவு வீட்டில் கோபால் இருந்துள்ளார் அப்போது அந்த கும்பல் கோபால் வீட்டுக்கு சென்று கோபாலை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து சென்றுள்ளனர்.சிறிது தூரம் சென்றதும் அந்த கும்பல் கோபாலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கும்பல் மது பாட்டிலால் கோபாலை குத்தி உள்ளனர்.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபாலை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் போகும் வழியில் கோபால் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொலையில் சம்பந்தப்பட்ட 6 பேர் கொண்ட கும்பலை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
3 பேர் கைது
இந்த நிலையில் நேற்று ஊத்துக்குளி போலீசார் பெட்டிக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக 3 பேர் வந்துள்ளனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் எஸ்.பெரியபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் சுபாஷ் (20) மற்றும் 2 சிறுவர்கள் என்றும், இவர்கள் 3 பேரும் கோபால் கொலையில் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story