கோர்ட்டு உத்தரவு படி டாஸ்மாக் கடை அகற்றம்
திருப்பூர் முருகம்பாளையம் டாஸ்மாக் கடை கோர்ட்டு உத்தரவு படி அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வீரபாண்டி
திருப்பூர் முருகம்பாளையம் டாஸ்மாக் கடை கோர்ட்டு உத்தரவு படி அகற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டாஸ்மாக் கடை
திருப்பூர் முருகம்பாளையம் பிரதான சாலையில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வந்தது. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்படுவதாகவும், எனவே கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல், அனைத்துக் கட்சியினர் முற்றுகைப் போராட்டம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
இதையைடுத்து டாஸ்மாக் கடையையொட்டி பார் நடத்தி வரும் பார் உரிமையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கலெக்டர் உத்தரவுக்கு இடைக்காலத் தடை வாங்கினார். இடைக்கால உத்தரவை எதிர்த்து ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டி உறுப்பினர்கள் பாலசுப்ரமணியம், செந்தில்குமார், கருப்பசாமி ஆகியோர் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்து சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகற்றம்
இறுதியாக டாஸ்மாக் கடையை அகற்ற திருப்பூர் கலெக்டர் போட்ட உத்தரவு செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் டாஸ்மாக் கடை அதே பகுதியில் செயல்பட்டு வந்தது. அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் தொடர்ந்து மதுக்கடையை அகற்றக் கோரி வலியுறுத்தி வந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு டாஸ்மாக் கடை தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் அறப்போராட்டம் வென்றது என்று போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். டாஸ்மாக் கடையை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றது, திருப்பூர் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story