முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்


முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 25 Oct 2021 11:54 PM IST (Updated: 25 Oct 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

முதன்மை கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர், 
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை 10 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துள்ளது. அதில் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியாற்றி வரும் மகேஸ்வரி, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்லில் பணியாற்றும் பாலுமுத்து, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் பணியாற்றும் சுபாஷினி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை சரபோஜி மகாராஜாவின் சரஸ்வதி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் நிர்வாக அலுவலராக பணியாற்றும் ஞானகவுரி, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா பிறப்பித்துள்ளார்.

Next Story