ஆக்கிரமிப்பு அகற்றம்


ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 26 Oct 2021 12:22 AM IST (Updated: 26 Oct 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

சாத்தூர், 
  சாத்தூர் அருகே நென்மேனியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்துள்ளார். அந்த இடம் நென்மேனி ஊராட்சிக்கு சொந்தமானது. எனவே அந்த காலி இடத்தை அகற்ற ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருக்கன்குடி போலீசார் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை சாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரவி பார்வையிட்டார்.

Next Story