தினத்தந்தி புகார் பெட்டி
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலைகளை சீரமைக்க கோரிக்கை
உப்பிலியபுரம் பகுதியிலுள்ள பச்சைமலையில் தொடரும் பலத்த மழையால் மலைவாழ் மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர். டாப்செங்காட்டுப்பட்டியிலிருந்து சோபனபுரம் செல்லும் வனத்துறைக்குட்பட்ட சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால், லாரி மற்றும் பிற வாகனங்கள் செல்வது கேள்விக்குரியதாகி உள்ளது. சாலைகளின் ஓரங்களில் இரும்பிலான தடுப்புகளை அகற்றி, கான்கிரீட் கட்டைகளை அமைப்பதன் மூலம், மழைகாலங்களில் வரும் மண் அரிப்புகள் சாலைகளில் தேங்கி, சாலைகளில் சேதங்களை தவிர்ப்பதுடன், விபத்துகளையும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி.
நாய்கள் தொல்லை அதிகரிப்பு
திருச்சி மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட 46 வது வார்டு பீமநகர் நியூ ராஜா காலனியில் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றால் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. மேலும் இந்த நாய்கள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், நியூ ராஜா காலனி, திருச்சி.
வேகத்தடை அமைக்க வேண்டும்
திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், பூக்கொல்லைத் தெருவுக்கு வளைந்து செல்லும் சாலையில் உள்ள தஞ்சை சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சீரமைக்கும் பணியின்போது இந்த வேகத்தடை அகற்றப்பட்டது. தற்போது இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சையது முஸ்தபா, பூக்கொல்லைத் தெரு, திருச்சி.
தூர்ந்துபோன கழிவுநீர் வாய்க்கால்கள்
திருச்சி மாவட்டம், கூனிபஜார் சவேரியார் தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே தூர்ந்துபோய் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழை பெய்யும்போது கழிவுநீருடன், மழைநீர் கலந்து சாலையில் செல்வதுடன் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கூனிபஜார், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி பீமநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் அப்பகுதியில் சாலையோரத்தில் கொட்டப்படுவதினால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பீமநகர், திருச்சி.
இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி
பெரம்பலூர் மாவட்டம், வைத்தியநாதபுரம் கிராமத்தில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் தூண்கள் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வைத்தியநாதபுரம், பெரம்பலூர்.
ஆபத்தான நிலையில் மின்மாற்றி
பெரம்பலூர் மாவட்டம் காரியானூர் சோலைநகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சீரான நிலையில் மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில், அப்பகுதியில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்மாற்றி கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் அப்பகுதியில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காரியானூர், பெரம்பலூர்.
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி கடுங்காலி கொட்டாய் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரும் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கடுங்காலி, அரியலூர்.
வடிகால் வசதி இன்றி தேங்கும் மழைநீர்
கரூர் மாவட்டம், தான்தோன்றி ஒன்றியம், ஜெகதாபி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆனந்த கவுண்டனூரில் வடிகால் வசதி இல்லாததால் மழை பெய்யும்போது, ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஜெகதாபி, கரூர்.
உப்பிலியபுரம் போலீஸ் நிலையம் தரம் உயர்த்தப்படுமா?
உப்பிலியபுரம் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டு 84 ஆண்டுகளாகிறது. எரகுடியில் உள்ள புறக்காவல் நிலையமும் இந்த காவல்நிலைய கட்டுப்பாட்டுக்குள் உட்பட்டது. இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 22 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இப்பகுதியில் சமூக குற்ற நடவடிக்கைகள், சைபர்கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை தடுக்க உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தை இன்ஸ்பெக்டர் அந்தஸ்துடன் மேம்படுத்தவும், எரகுடி புறக்காவல் நிலையத்தை சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்துடன் போலீஸ் நிலையமாக மாற்றவும், பச்சைமலை, புளியஞ்சோலை பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி.
தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 2,430-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள பகுதியில் 24 ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப்பகுதிகளில் ஏதேனும் தீ விபத்துக்கள் மற்றும் மீட்புப்பணிகள் குறித்த விபத்துக்கள் ஏற்பட்டால் முசிறி, கரூர், நாமக்கல் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்புதுறை வீரர்கள் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்படும், இவ்வாறு நடைபெறும் நிகழ்வின்போது முசிறி, கரூர், நாமக்கல் பகுதியில் இருந்து வரும் தீயணைப்பு படையினர் காட்டுப்புத்தூர் பகுதிக்கு வருவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. எனவே காட்டுப்புத்தூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காட்டுப்புத்தூர், திருச்சி.
பயன்பாட்டிற்கு வராத கட்டிடம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தெற்குத்தெருவில் உள்ள பழைய சொசைட்டி கட்டிடத்தை இடித்துவிட்டு புது கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் கடந்த 6 மாதங்களாக அப்படியே உள்ளது. இதனால் இந்த கட்டிடம் மது அருந்தும் கூடாரமாக மாறி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், விராலிமலை, புதுக்கோட்டை.
Related Tags :
Next Story