பருத்தி செடியில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை
பருத்தி செடியில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் மக்காச் சோளம், பருத்தி, உளுந்து, பாசிப்பயறு ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பெய்த தொடர்மழையினால் பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளது. இப்பயிர்களை வேளாண்மைதுறை உதவி இயக்குனர் ஜோதிபாசு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பருத்தி செடியில் கூன்வண்டு தாக்குதல் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே பருத்தி செடியில் கூன்வண்டு தாக்குதல் ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு குளோர்பைரிபாஸ் 2 மி.லி., கார்பன் டாசியம் ஒரு கிராம் வீதம் கலந்து விதைத்த 15 அல்லது 30 நாட்களுக்குள் செடியை சுற்றி ஊற்ற வேண்டும். அல்லது கார்லாபூரான் குருணை மருந்தை இடலாம். 40 முதல் 45 நாட்களுக்குள் செடியை சுற்றி மண் அணைக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்து பருத்தி பயிருக்கு அதிகம் தேவைப்படுவதால் பருத்தி நுண்ணூட்ட உரம் ஏக்கருக்கு 5 கிலோ வீதம் பயிருக்கு இடுவதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story