ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படுமா?
ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தாயில்பட்டி,
ஏழாயிரம் பண்ணையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பட்டாசு ஆலைகள்
ஏழாயிரம் பண்ணையை சுற்றி முத்தாண்டியாபுரம், இ.எல்.ரெட்டியபட்டி, கரிசல்பட்டி, அப்பனம்பட்டி, பாண்டியாபுரம், சோலைப்பட்டி, ஊத்துப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சிவசங்கு பட்டி, கீழசெல்லையாபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி, கல்லூரி,செல்வதற்கும் வெளியூர் செல்வதற்கும் ஏழாயிரம்பண்ணைக்கு தான் வரவேண்டும்.
மேலும் ஏராளமான பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள், கல்குவாரி இருப்பதால் கனரக வாகனங்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்கின்றன. பஸ் ஸ்டாண்ட் அருகில்தான் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
ஆதலால் ஏழாயிரம் பண்ணை பகுதியில் வாகனங்களின் போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் இங்கு போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் ராஜாசிங், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
ஏழாயிரம் பண்ணைக்கு தினமும் பல்வேறு பணிகள் நிமித்தமாக எண்ணற்ற பேர் வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகனங்களை ஒழுங்குப்படுத்த போலீசார் யாரும் இல்லை. அடுத்த வாரம் முதல் நடுநிலைப்பள்ளிகள் திறக்க இருப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள், பள்ளிக்கு செல்லும்போது கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதேபோல மாரியம்மன் கோவில் முன்பாக பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கு தடைவிதிக்க வேண்டும். அத்துடன் ேபாக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசாரை உடனே நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story