2 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றி நடந்து சென்று சாதனை நிகழ்ச்சி


2 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றி நடந்து சென்று சாதனை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 Oct 2021 12:40 AM IST (Updated: 26 Oct 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

2 கி.மீ. தூரம் சிலம்பம் சுற்றி நடந்து சென்று சாதனை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது

அன்னவாசல்
 இலுப்பூரில், பஞ்சபூதா உலக சாதனை புத்தகத்தின் சார்பாக தமிழரின் பாரம்பரிய போர் கலையான சிலம்பத்தை 2 கிலோ மீட்டர் நடந்து சென்று 1 மணி நேரம் நின்ற நிலையில் சுழற்றி 638 மாணவர்கள் சாதனை படைத்தனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். மாஸ்டர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். இதில் 638 மாணவர்கள் கலந்து கொண்டு இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து சிலம்பத்தை சுற்றியவாறு ஊர்வலமாக இலுப்பூர் மேலப்பட்டி அய்யப்பன் கோவில் திடலுக்கு நடந்து சென்று அங்கு ஒருமணி நேரம் சிலம்பத்தை சுழற்றி சாதனை படைத்தனர். விழாவில் தாசில்தார் முத்துக்கருப்பன், அரசு மருத்துவர் புனிதகுமார்,
தனி தாசில்தார் ரவிச்சந்திரன், பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி, புதுக்கோட்டை சிலம்பாட்ட கழக செயலாளர் சத்தியமூர்த்தி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பிச்சை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story