மின்னல் தாக்கி கோவில் காளை செத்தது


மின்னல் தாக்கி கோவில் காளை செத்தது
x
தினத்தந்தி 26 Oct 2021 1:03 AM IST (Updated: 26 Oct 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கோவில் காளை ஒன்று செத்தது.

அன்னவாசல்
அன்னவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இலுப்பூர், சித்தன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, நார்த்தாமலை, குடுமியான்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேபோல நேற்றும் விட்டு, விட்டு இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது முக்கண்ணாமலைப்பட்டியை அடுத்த வவ்வாநேரியை சேர்ந்த ரெங்கராஜ் என்பவரது கோவில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று வயலில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்டிருந்தது.
 அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் அந்த ஜல்லிக்கட்டு கோவில் காளை பரிதாபமாக செத்தது. இதனையடுத்து ரெங்கராஜ் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் அந்த ஜல்லிக்கட்டு கோவில் காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கோவில் ஜல்லிக்கட்டு காளை செத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story