சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயற்சி


சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 26 Oct 2021 1:05 AM IST (Updated: 26 Oct 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.

கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள காணிக்கைபுரம் ெரயில்வே கேட் பகுதியில் சாலை கடந்த ஒரு வருட காலமாக மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. அதனை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட முடிவெடுத்து கூடினர். இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஜெயவேல், வருவாய் ஆய்வாளர் இளையபெருமாள் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அந்த சாலையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story