மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை-பணம் திருட்டு + "||" + Breaking the lock of the house and stealing 15 pounds of jewelery-money

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை-பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை-பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
செந்துறை:

விவசாயி
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(வயது 65). விவசாயியான இவர் தனது மனைவி இளமதியுடன் வசித்து வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் கணேசன் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இளமதி வீட்டை பூட்டிவிட்டு மிளகாய்ப்பொடி அரைக்க அரவை ஆலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து மதியம் கணேசனும், இளமதியும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ மற்றும் இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு அவற்றில் இருந்த 15 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து குவாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் வீட்டை பார்வையிட்டு, நகைகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் இடையக்குறிச்சி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு
மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடு நடைபெற்றது.
2. வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை கொள்ளை
ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
3. நகைக்கடை அதிபர் கழுத்தில் கத்தியை வைத்து 103 பவுன் நகை கொள்ளை
நகைக்கடை அதிபர் கழுத்தில் கத்தியை வைத்து 103 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
4. 2 வயது குழந்தையிடம் நகை திருட்டு
2 வயது குழந்தையிடம் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. கோவிலில் பொருட்கள் திருட்டு
கோவிலில் பொருட்கள் திருட்டு போனது.