கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஆலங்குடி
ஆலங்குடி கல்லுகுண்டு கரையை சேர்ந்தவர் விஜய் என்கிற செல்வகணபதி (வயது24). இவரை கடந்த ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி ஆலங்குடியை சேர்ந்த சசிதரன் என்கிற செந்தில் ராஜா (29), விமல்ராஜ் (22), வீரமணி (21), வெள்ளைச்சாமி (21) மற்றும் 15 பேர் முன் விரோதம் காரணமாக தாக்கி கொலை செய்தது தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுபோன்ற தொடர் ரவுடியிசத்தில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு சசிதரன், விமல்ராஜ், வீரமணி, வெள்ளைச்சாமி ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்ததின் பேரில் கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். அதன்படி 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் கையெழுத்து பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story