மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2021 1:34 AM IST (Updated: 26 Oct 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

அம்பையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அம்பை:
அம்பையில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிற்சங்கங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு 10 சதவிகித தீபாவளி போனஸ் அறிவித்ததை கண்டித்தும், 20 சதவிகிதம் போனஸ் வழங்க வலியுறுத்தியும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பை மின்வாரிய அலுவலக முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தலைவர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மறுமலர்ச்சி சங்க துணைப் பொதுச் செயலர் கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச. கிளை தலைவர் கருத்தப்பாண்டியன், சங்கரன், கார்த்திகேயன், சி.ஐ.டி.யு. சுப்பிரமணி, மாரியப்பன், ஆனந்த், ஐக்கிய சங்கம் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story