திருச்சி மாவட்டத்தில் பலத்த மழை
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
திருச்சி, அக்.26-
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
திருச்சியில் மழை
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணிநேரம் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது. பின்னர் இரவு விடிய, விடிய அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
ஜீயபுரம் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுக்கு ஒரு வீட்டின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் சேதமானது. இதேபோல் நேற்றும் பகல் பொழுதுக்கு பிறகு மாலை 4.30 மணி அளவில் மழை பெய்தது. அதன்பிறகு அவ்வப்போது விட்டு, விட்டு பலத்த இடியுடன் மழை பெய்து கொண்டே இருந்தது.
இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நேற்று விட்டு, விட்டு பெய்த மழையால் தரைக்கடை வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதேபோல் மணப்பாறை, தொட்டியம், திருவெறும்பூர், முசிறி, தா.பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
சராசரியாக 7.50 மி.மீ.மழை பதிவு
லால்குடி-3.40, புள்ளம்பாடி-3.40, சமயபுரம்-2.80, சிரகுடி-6, வாத்தலைஅணைக்கட்டு-26.20, மணப்பாறை-13, கோவில்பட்டி- 5.20, மருங்காபுரி-10.20, முசிறி-15, புலிவலம்-3, தா.பேட்டை-15, நவலூர்குட்டப்பட்டு-36.20, துவாக்குடி-12, தென்பரநாடு-3, பொன்மலை-3.20, விமானநிலையம்- 4.70, ஜங்ஷன்-7, திருச்சி டவுன்-6. திருச்சி மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக 179.90 மில்லி மீட்டரும், சராசரியாக 7.50 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

Related Tags :
Next Story