பைனான்சியர் சரமாரி வெட்டிக் கொலை


பைனான்சியர் சரமாரி வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 26 Oct 2021 1:47 AM IST (Updated: 26 Oct 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பைனான்சியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

நெல்லை;
நெல்லை அருகே வீடு புகுந்து பைனான்சியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பிணமாக கிடந்த பைனான்சியர் 

நெல்லை அருகே உள்ள தாழையூத்து தென்றல் நகரைச் சேர்ந்தவர் முருகன் என்ற முருகானந்தம் (வயது 48). இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு இவர் தனது வீட்டில் உட்கார்ந்து இருந்தார். இவருடைய மனைவி உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். மீண்டும் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் உள்ளே தனது கணவர் முருகானந்தம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை யாரோ அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.  
 
போலீசார் விசாரணை 

இதுகுறித்து தகவலறிந்ததும் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர் பத்மநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் முருகானந்தத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், முருகானந்தத்திற்கும், அவரது தம்பிக்கும் இடையே சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. எனவே அவர் முருகானந்தத்தை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story