ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 26 Oct 2021 2:12 AM IST (Updated: 26 Oct 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தென்காசி:
தென்காசி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் கூலக்கடை பஜார், கன்னிமாரம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நேற்று திடீரென ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடைகளில் முகப்பு பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த போர்டுகள், நடந்து செல்லும் படிகள் போன்றவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

Next Story