ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
குளச்சல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.
குளச்சல்:
குளச்சல் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் ேதடி வருகிறார்கள்.
மூதாட்டி
திங்கள்நகர் அருகே உள்ள நெய்யூர் ஆலங்கோட்டை சேர்ந்தவர் முருகன், லாரி டிரைவர். இவருடைய மனைவி சாவித்திரி (வயது 60). இவருடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி நேற்று மண்டைக்காட்டில் நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக சாவித்திரி குமாரகோவிலில் இருந்து மண்டைக்காடு சென்ற அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், சாவித்திரி பஸ்சில் நின்று கொண்டே பயணம் செய்தார்.
நகை பறிப்பு
பஸ் திங்கள்நகரை கடந்து கல்லுக்கூட்டம் நிறுத்தத்தில் நின்றது. அப்போது, சாவித்திரி தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் சாவித்திரியின் நகையை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் பஸ்சுக்குள் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. சத்தம் கேட்டு டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
பின்னர், இதுகுறித்து சாவித்திரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story