8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்
8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்
ஆரல்வாய்மொழி:
நாகர்கோவிலில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க நெல்லை மாவட்டத்தில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் 2 யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த யானைகள் உரிய அனுமதி இல்லாமல் கொண்டுவரப்பட்டதால் மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன், வனவர் ரமேஷ் ஆகியோர் நாகர்கோவிலில் 2 யானைகளையும் பறிமுதல் செய்து, ஆரல்வாய்மொழி வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
அதைத்தொடர்ந்து அனுமதி இல்லாமல் 2 யானைகளை தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்த யானைகளின் உரிமையாளர்கள், யானை பாகன்கள் உள்ளிட்ட 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை செலுத்தியதும் யானைகள் விடுவிக்கப்பட்டன.
Related Tags :
Next Story