போலி ஆவணம் மூலம் நிலம் விற்க முயன்ற 7 பேர் கைது


போலி ஆவணம் மூலம் நிலம் விற்க முயன்ற 7 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 9:32 AM IST (Updated: 26 Oct 2021 9:32 AM IST)
t-max-icont-min-icon

வடபழனியில் போலி ஆவணம் மூலம் நிலம் விற்க முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை வடபழனி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கதிரேசன்(வயது 52). இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். திருவான்மியூர் வால்மிகி நகரில் உள்ள 37 கிரவுண்ட் இடத்தை அம்பத்தூரை சேர்ந்த அமலாபாப்பாத்தி(78), ராஜேந்திரா(64), அருள்ஜோதி(65) ஆகியோர் ரூ.40 கோடிக்கு விற்பனை செய்ய கதிரேசனிடம் விலை பேசினர்.

இதற்காக கடந்த மாதம் கிண்டியில் வைத்து முன்பணமாக ரூ.5 லட்சத்தை அவர்களிடம் கொடுத்த கதிரேசன், நிலத்தின் ஆவண நகல்களை வாங்கி சரி பார்த்த போது போலி ஆவணங்கள் என தெரிந்தது. இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலா பாப்பாத்தி, ராஜேந்திரா, அருள்ஜோதி மற்றும் போலி ஆவணம் தாயாரித்த குர்கோஸ் மேத்யூ(59), ராமதாஸ்(63), மூர்த்தி(35), ஹரிபிரசாத் (38) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.

Next Story