கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது


கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 1:41 PM IST (Updated: 26 Oct 2021 1:41 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே வடமாநில தொழிலாளர்களை தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலைக்கு வடமாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் 15 பேர் நேற்று அதிகாலை சென்னை சென்டிரலுக்கு ரெயில் மூலம் வந்தனர். அங்கு இருந்து 3 ஆட்டோக்களை தலா ரூ.1000 என வாடகைக்கு பேசி எடுத்துக்கொண்டு 15 வடமாநில தொழிலாளர்களும் கும்மிடிப்பூண்டி சிப்காட்டை வந்தடைந்தனர்.வடமாநில தொழிலாளர்களிடம் மொத்த வாடகையாக ரூ.3 ஆயிரத்தை பெற்ற ஆட்டோ டிரைவர்கள் 3 பேரும் சேர்ந்து அவர்களை தாக்கி மேலும் ரூ.19 ஆயிரத்தை அவர்களிடம் இருந்து பறித்துச்சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர்களான சென்னை வியாசார்பாடியை சேர்ந்த ஆகாஷ் (வயது21), லெனின் (30), சூளையை சேர்ந்த பாலாஜி (30) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் 3 ஆட்டோக்களையும் போலீசார் கைப்பற்றினர்.

Next Story