செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 95 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 95 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2021 2:30 PM IST (Updated: 26 Oct 2021 2:30 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 95 பேர் பாதிக்கப்பட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 95 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 243-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 735 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,502- ஆக உயர்ந்துள்ளது. 1,006 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 781 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 163 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,256 பேர் உயிரிழந்துள்ளனர். 362 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story