தூத்துக்குடி அருகே அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 தொழிலாளர்கள் பலி


தூத்துக்குடி அருகே அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற  2 தொழிலாளர்கள் பலி
x
தினத்தந்தி 26 Oct 2021 6:14 PM IST (Updated: 26 Oct 2021 6:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 தொழிலாளர்கள் பலியாகினர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அரசு பஸ் மோதி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கூலித்தொழிலாளர்கள்
தூத்துக்குடி அருகே உள்ள கீழத்தட்டப்பாறையை சேர்ந்தவர்கள் கொம்புராஜ் (வயது 50), கொம்பையா (37). கூலித்தொழிலாளர்களான இவர்கள் நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடியில் வேலை முடித்து விட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.
மோட்டார் ைசக்கிளை கொம்பையா ஓட்டினார். பின்னால் கொம்புராஜ் அமர்ந்து இருந்தார். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் தட்டப்பாைற விலக்கில் சாலையை கடக்க முயன்றது.
அரசு பஸ் மோதி பலி
அப்போது நெல்லையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேருக்கும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கொம்புராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கொம்பையா காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த கொம்பையாவை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடிக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story