மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2021 10:09 PM IST (Updated: 26 Oct 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 5 சதவீத வேலைவாய்ப்பு வழங்ககோரி ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராமநாதபுரம், 
அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 5 சதவீத வேலைவாய்ப்பு வழங்ககோரி ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் சமவாய்ப்பு கொள்கை அரசாரணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பு வழங்க கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். 
ஊர்வலம்
மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் நிலர்வேணி, மாவட்டதுணை செயலாளர் முத்துராமலிங்கம், நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, முகம்மது சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கோரிக்கைகளை அடங்கிய மனுவை மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக சென்று வழங்கினர்.

Next Story