பாலித்தீன் குப்பைகள் அகற்றும் பணி
தேனி புறவழிச்சாலையோரம் வால்கரடு வனப்பகுதியில் குவிந்து கிடந்த பாலித்தீன் குப்பைகளை அகற்றும் பணி நடந்தது.
தேனி:
தேனி மாவட்ட வனத்துறை சார்பில் தேனி புறவழிச்சாலையோரம் வால்கரடு வனப்பகுதியில் குவிந்து கிடந்த பாலித்தீன் குப்பைகளை அகற்றும் வகையில் தூய்மை பணி முகாம் நேற்று நடந்தது. இதில் வனத்துறை பணியாளர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள், தேசிய மாணவர் படை, தேசிய பசுமைப்படை மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
இந்த தூய்மை பணி முகாமை உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) மணிகண்டபிரபு தொடங்கி வைத்தார். தேனி வனச்சரகர் சாந்தகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் முன்பு தொடங்கி, புறவழிச்சாலையில் வனத்துறை நாற்றுப்பண்ணை வரை தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வனத்துறையின் பணிகள் மற்றும் நாற்றுப்பண்ணையின் செயல்பாடுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story