பெயிண்டரை கொலை செய்தவர் போலீசில் சிக்கினார்
போலீஸ் நிலையம் அருகே பெயிண்டரை கொலை செய்தவர் போலீசில் சிக்கினார்.
சிவகங்கை,
போலீஸ் நிலையம் அருகே பெயிண்டரை கொலை செய்தவர் போலீசில் சிக்கினார்.
கொலை
சிவகங்கை போலீஸ்நிலையம் அருகில் வசித்தவர் முத்துக் குமார் (வயது40). பெயிண்டரான இவர் தம்பி திவான் (36), சித்தப்பா மகனான முருகன் (36) ஆகியோருடன் போலீஸ் நிலையம் அருகில் சென்றபோது அங்குவந்த வாலிபர் 3 பேரையும் வாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயத்துடன் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பால்பாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மகேசுவரி ஆகியோர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திவான் மீதுகொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உள்பட 10 வழக்குகள் உள்ளது என்பதும் முன் விரோதம் காரணமாக சிவகங்கையை சேர்ந்த ஒருவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. 3 பேரையும் வெட்டிய பின்னர் அவர் மற்றொருவரின் உதவியுடன் தப்பி சென்றதும் தெரியவந்தது.
விசாரணை
இதைதொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் முத்துக்குமாரை கொலை செய்தவர் போலீசில் சிக்கினார். அவரை தனி இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story