கொலை வழக்கில் 5 பேர் கைது
தினத்தந்தி 26 Oct 2021 10:35 PM IST
Text Sizeகொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி,
காரைக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 48) என்பவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் 3 பேர் காரைக்குடி புறநகர் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இக்கொலைவழக்கில் தொடர்புடைய சேர்வார் ஊரணி பகுதியை சேர்ந்த சரவணன் (52), அவரது மருமகள் அம்சவல்லி (20) ஆகிய 2 பேரும் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire