இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி, அக்.27-
கோவில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில் நகைகள்
இந்துக்கள் கோவில்களில் காணிக்கையாக அளித்த நகைகளை உருக்கும் திட்டத்தை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்தது. இந்த திட்டத்தை உடனே கைவிட வலியுறுத்தி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி நகர தலைவர் கலைகோபி தலைமை தாங்கினார். கிரீடா பாரதி மாநில செயலாளர் அசோக் பேசினார். மாவட்ட செயலாளர் யுகேஸ்வரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து தெருக்கூத்து கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், யுவராஜ், சபரி, சந்தோஷ், புகழேந்தி, தமிழரசன், ராஜசேகர், சக்தி மனோகர், ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர், தேன்கனிக்கோட்டை
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட செயலாளர் உமேஷ் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாநில இணை செயலாளர் விஷ்ணுகுமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஓசூர் மாநகர பொதுச்செயலாளர் மோகன் ரெட்டி, துணைத்தலைவர் கேசவகுமார், நகர செயலாளர் விஜி உள்பட பலர் கலந்து கொண்டு கோவில் நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
தேன்கனிக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகர தலைவர் ஹரிஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய கார்த்திக் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை தலைவர் ரகு, நகர பொதுச்ெசயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் கோவில் நகைகளை உருக்கக் கூடாது என்றும், நகைகளை உருக்க முயற்சி செய்யும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story